பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகர சற்றுமுன் சரண்

நீதிமன்றில் சரண்
முன்னாள் றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் தொடர்புடைய கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இவர் சற்று முன்னர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில், சட்டத்தரணியுடன் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைச்சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகவுள்ளதாகவும், உரிய பிணையில தன்னை விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமையவே இன்றைய தினம் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெமீலுடன் போட்டியிடும் ஹக்கீம் !

wpengine

யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலி!

Editor

கிழக்கு மாகாண சபைக்கு நாளை இறுதி நாள்

wpengine