Breaking
Mon. Nov 25th, 2024

ஞானசார தேரருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கமளிக்க சென்றவர்கள், முதலில் பகிரங்க நிகழ்வுகளில் பேசும் போது கூட நாகரீகமாக பேசத் தெரியாதவரும் தனது தனிப்பட்ட பல விடயங்களில் விமர்சனங்களை கொண்டுள்ள அசாத்சாலிக்கு இஸ்லாத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான முன்னனியின் தலைவர் மௌலவி ஐ.என்.எம் மிப்லால் தெரிவித்தார்.

அவரது ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போது ஒரு முஸ்லிம் குழுவினருக்கும் ஞானசார தேரருக்குமிடையில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று சென்று கொண்டிருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தை மேசையில் அசாத்சாலி மிக முக்கியமான ஒருவராக கூறப்படுகிறார்.

இவர் பகிரங்க நிகழ்வுகளில் பேசும் போது கூட நாகரீகம் பேணி பேசத் தெரியாதவர். ஞானசார தேரர் போன்றவர்களை பெரியவர்களாக்கி இனவாதத்தை ஊக்குவித்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

முஸ்லிம்களிடையே ஞானசார தேரர் எவ்வாறு ஒரு இனவாதியாக நோக்கப்படுகிறாரோ அவ்வாறு இவர் பேரின மக்களிடத்தில் ஒரு இனவாதியாக பார்க்கப்படுகிறார். இப்படி அவரது தனிப்பட்ட நடத்தைகள் உட்பட பல விடயங்களை அடுக்கிச் செல்லலாம். இதனை வைத்து நாம் கூற வருவது இப்படியான ஒரு செயற்பாட்டுக்கு எந்த வகையிலும் அசாத் சாலி பொருத்தமானவரல்ல.

இவர் தனது தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தால் எதனையும் செய்வார். அண்மையில் இவரின் எதிரியான தௌஹீத் ஜமாத்தை எதிர்க்க ஞானசார தேரரோடு இணைந்த விடயங்கள் எல்லாம் உள்ளன. இன்று இவர் இப்படியான ஒரு விடயத்தை முன்னின்று செய்து கொண்டிருப்பாராக இருந்தால் அதில் ஏதேனும் மறைமுக நோக்கமிருக்கும். இன்று இவர் இவ்வாட்சியாளர்களின் வாலை பிடித்து தூங்கிக்கொண்டிருக்கின்றார்.அவர்களின் ஏதேனும் அஜன்டாவின் கீழ் தான் நிச்சயம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்.

ஞானசார தேரர் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுக்கள் இருப்பதால் இவர் இன்று அகப்படாது போனாலும் என்றோ ஒரு நாள் அகப்படுவார். அவற்றை சரி செய்வதும் ஜனாதிபதி பொது மன்னிப்பை பெறுவதற்குமான வழி வகைகளை ஏற்படுத்துவதுமே இந்த செயற்பாடுகளின் நோக்கமாக இருக்கும். அல்லாஹ் மீதும் அவனது வேதமான அல் குர்ஆன் மீதும் கட்டுக்கதைகளை கூறிய இவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.இவர் தலைமையில் ஒரு பெரும் கலவரமே இடம்பெற்றுள்ளது.உண்மையாக மனம் திருந்தாத இவரை எப்படி மன்னிக்க முடியும் என அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *