நீதிமன்ற நடவடிக்கைகளை இலத்திரனியல் முறையில் செயற்படுத்துவதற்கான முறையொன்று புதிய சட்டமூலத்தின் ஊடாக கொண்டு வரப்படவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலத்திரனியல் கையொப்பமிடும் நடவடிக்கையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தற்போது முழுமையாக இலத்திரனியல் மயமாக்கப்பட்டு வருவதாகவும், 20 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் 25 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் 6.2 மில்லியன் முகப்புத்தக பயன்பாட்டாளர்கள் உள்ளமை குறித்து முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஆண்டு முதல் இரண்டு உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
தொலைத்தொடர்பு குறித்து கொண்டு வரப்படவுள்ள திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக எதிர்வரும் காலத்தில் ஒப்பந்தங்களை கூட கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.