பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக,குமார் வெல்கம நீக்கம்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாவலபிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுகம தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுமித்ரா பிரயங்கனி அபேவீரவும், நாவலபிட்டி தொகுதிக்கான அமைப்பாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் எச்.ஏ.ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

2022 ல் புதிய அரச ஊழியர்கள் இல்லை வாகனம் இறக்குமதி தடை -பசில்

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்! ஊடகவியலாளர் தாக்குதல்

wpengine

Braking பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம்

wpengine