பிரதான செய்திகள்

மன்னார்,சிலாத்துறையில் சட்டவிரோத மண் அகழ்வு! உழவு இயந்திரத்திற்கு ஆவணம் இல்லை

(அப்துல்லாஹ்)

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டுவந்த இரண்டு உழவு இயந்திரங்களை சிலாவத்துறை பொலிஸ் நிலையம் நேற்று கைப்பற்றி உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த இரண்டு இயந்திரங்களும் கொக்குப்படையான்,வேப்பங்குளம் பகுதியில் உள்ள இயந்திரங்கள் என தகவல் கிடைக்கபெற்றுள்ளது.இதில் ஒரு இயந்திரத்திற்கு வாகன தகடு,அனுமதி பத்திரம்  இல்லை என அறிய முடிகின்றது.

இது போன்று மன்னார்,முசலி பிரதேசத்தில் தொடராக சட்டவிரோத மண் அகழ்வு தொடராக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பில் பல அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

சிறையில் இருந்த மேர்வின் சில்வா வைத்தியசாலையில்! கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

Maash

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடம்பெற்றுவரும் மதில் அமைக்கும் செயற்பாடுகள்

wpengine

உடனடியாக அகற்ற வேண்டும் தையிட்டியில் பௌத்த விகாரை.! லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்.

Maash