பிரதான செய்திகள்

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரை கடற்கொந்தளிப்பு

எதிர்வரும் 24 மணி நேரத்தில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிக்கு அப்பால் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது , காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , வட மாகாணத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக , மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

Related posts

வனவிலங்கு கணக்கெடுப்பு துல்லியமற்றவை, மீண்டும் கணக்கெடுக்கும் நிலை .

Maash

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine

ஊதியம் இன்றி அலுகோசு பதவியை பொறுப்பேற்பதற்கு தான் தயார்

wpengine