பிரதான செய்திகள்

கள்ளு குடிப்பவர்களுக்கு வந்த சோதனை

செயற்கை கள்ளு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத கள்ளு உற்பத்தியை தடுப்பதற்காக கலால் வரி கட்டளைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரத்தில் சீவப்படும் கள்ளு உற்பத்திக்கான சீவல் அல்லது கள்ளை மரத்திலிருந்து இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கலால் கட்டளை சட்டத்திற்கு உட்பட்ட விடயமாகும்.

கடந்த காலங்களில் இந்த கட்டளைச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக தற்போது கித்துள் மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள்ளை பெற்றுக்கொள்வதற்காக சீவுதல் அல்லது மரத்திலிருந்து கள்ளை இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவேண்டியதில்லை.

இதன் காரணமாக கள்ளுத்தவறணை, போத்தல்களில் கள்ளை அடைத்தல் மற்றும் வினாகிரி தயாரிப்பதற்காக கிடைக்கப்பெறும் கள்ளின் தரத்தை மதிப்பீடு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இவை செயற்கை கள்ளு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத கள்ளு தயாரிப்பின் அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதன் காரணமாக விதப்புரைகளை உட்படுத்தி மதுவரி கட்டளைகள் சட்டத்தினை திருத்துவதற்கும், அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மதுவரி (திருத்தங்கள்) சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

03 வருடங்களில் வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? சி.தவராசா

wpengine

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்ககூடாது! வவுனியாவில் கண்டனம்

wpengine

பொதுபல சேனாவை பாலூட்டி வளர்த்தவர்கள் அமைச்சுக்களை அலங்கரிக்கின்றனர்

wpengine