Breaking
Sun. Nov 24th, 2024

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்த வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புதிய தடைகளை விதித்துள்ளது.

இதன்படி, அந்நாட்டிற்கு சொந்தமான Petrel 8, Hao Fan 6, Tong San 2 மற்றும் Jie Shun ஆகிய நான்கு கப்பல்களும் உலகின் எந்த நாட்டின் துறைமுகங்களுக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பல்வேறு பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் வடகொரியா 6வது முறையாகவும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், அந்நாட்டிற்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தற்போது புதிய தடைகளை விதித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *