பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! வேட்பு மனு பணி ஆரம்பம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுக் குழுவை அமைக்கும் பணிகள் இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே, வேட்பாளர் தேர்வு இடம்பெறும்.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தரப்பினர், கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அகுனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

இனவாத சிந்தனை கொண்ட பேரினவாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

wpengine

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி செய்யுங்கள்

wpengine

மன்/அலாவுதீன் பாடசாலையினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine