Breaking
Mon. Nov 25th, 2024

வாகன இலக்க தகடுகளில், வானொலி சமிக்ஞை மூலம் செயல்படும் முறைமையினை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நவீன முறைக்கு அமைய வாகனங்களின் நடமாட்டத்தினை இலகுவாக காவல்துறையினரால் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாகன இலக்க தகடுகள் அடுத்த வருடத்தில் வாகன உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி கோபூரங்கள் போல நிர்மாணிக்கப்படும், இந்த கோபூரங்களின் ஊடாக வாகனங்களின் நடமாட்டத்தினை இலகுவாக கண்காணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு முதலில் இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, போலியான இலக்க தகடுகள் பொருத்தப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை இலகுவாக இனம்காண முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *