பிரதான செய்திகள்

கேரளா கஞ்சாவுடன் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த பெண் சமுர்த்தி அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மாகாண சிறப்பு சுற்றிவளைப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான இந்த பெண்ணிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மகனிடம் இருந்து மேலும் 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா தொகையின் பெறுமதி 2 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் கல்னேவ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
வீட்டு சூட்சுமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கண்டுபிடிக்க பொலிஸார் மோப்ப நாயின் உதவியையும் பெற்றுக்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணும் அவரது மகனும் மேலதிக விசாரணைகளுக்காக கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

wpengine

காரணம் தெரியவில்லை 40வயது பெண் தற்கொலை

wpengine

கலைஞர்கள் ,ஊடகவியலாளர்கள் நீதவான் பதவி -விஜயதாஸ ராஜபக்‌ஷ

wpengine