Breaking
Sun. Nov 24th, 2024

இங்கிலாந்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை வீட்டின் முன்னால் போராட்டம் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த சுவாதி என்பவர் தனது கணவர் ராஜேஸ் என்பவருடன் லண்டனில் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, திருமணத்தின்போது சுவாதியின் குடும்பத்தினர் 35 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த ராஜேஸ், அதன்பின்னர் லண்டனில் வேலை கிடைத்தால் அங்கு தனது மனைவியுடன் குடியேறினார்.
மேலும், மனைவியிடம் பணம் கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்துள்ளார், இதற்கு மாமனாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி தனது வீட்டிற்கு போன் செய்த சுவாதி, வரதட்சணை கேட்டு என்னை இங்கு கொடுமை செய்கிறார்கள். எனக்கு இங்கு வாழவே பிடிக்கவில்லை, நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.

சுவாதி பேசிய இரண்டு நாட்கள் கழித்து, தனது மாமனார் வீட்டிற்கு போன் செய்த ராஜேஷ், சுவாதி கடலில் விழுந்துவிட்ட காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் போன் செய்து சுவாதி இறந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் வரதட்சணைக்காக எனது மகளை கொலை செய்துவிட்டார்கள் என ஹைதராபாத் பொலிசில் புகார் அளித்துள்ளனர், ராஜேஷின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் இந்திய அரசும், தெலுங்கானா மாநில அரசும் சுவாதியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் எனவும், அவரின் கணவர் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுவாதி உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *