Breaking
Mon. Nov 25th, 2024
(இம்தியாஸ் முஹம்மட்)
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் உள்ள சமுக சேவைகள் திணைக்கள பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடாக தாய்சேய் நலன் பாதுகாக்கும் நோக்குடன் கர்ப்பிணிமார்களுக்கு நேற்று (6) கொடுக்கப்பட்ட  பொருற்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என சமுகவலை தள விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

உத்தியோகத்தர்கள் வழங்கிய நெத்தலி கருவாடு,பேரித்தம் பழம் அனைத்தும் பாவனைக்கு உகந்தவையாக இல்லையென்றும் சமுகவலைத்தள கருத்து தற்போது வெளியாகி வருகின்றது.

அத்துடன் இந்த கொடுப்பனவை வைத்து ஒரு சில அரச அதிகாரிகள்,கடை உரிமையாளர்கள் இலாபம் சம்பாதிப்பதாகவும் அறியமுடிகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலங்களும் அந்த பிரதேசத்தில் உள்ள பல நோக்கு கூட்டுறவு கிளையின் ஊடாக பெருற்களை கொள்வனவு செய்து பொருற்களை வினியோகம் செய்துவருகின்ற போது  முசலி பிரதேச செயலகம் மட்டும் தனியார் கடைகளிடம் பொருற்களை கொள்வனவு செய்துவருவதாக அறியமுடிகின்றது.

வழங்கப்படும் பொருற்களின் பெருமதி 2000/- ரூபா ஆனால் இதனை பெற்றுக்கொள்ள மரிச்சுக்கட்டி,பாலைக்குழி,கரடிக்குழி,நான்காம் கட்டை,அரிப்பு போன்ற தூர கிராமங்களில் இருந்து வந்து பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்வதில் பல  சிறமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கர்ப்பிணி தாய்மார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,சுகாதார அதிகாரிகள்,உரிய திணைக்களம் கரிசனை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *