பிரதான செய்திகள்

நோபல் பரிசு! ஏமாந்து போன மைத்திரி

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன்னர் ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட உள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய போட்டியாளர்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

 

Related posts

சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம்

wpengine

கூட்டமைப்பு எமக்குப் பலமாக அமையும் என பிரதமர் மஹிந்த

wpengine

4,640,086 மாணவர்களுக்கான சீருடைத் துணிகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Maash