உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏர்டொகனை கொலை செய்ய திட்டம்! இராணுவத்திற்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரஷிப் தயிப் ஏர்டொகனை கடந்த வருடம் படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக அவர்களுக்கு இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் உட்பட்ட 31 பேருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒன்பது பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி துருக்கி ஜனாதிபதி ரிஷப் தயிப் ஏர்டோகன் அவரது குடும்பத்தினருடன் துருக்கியில் உள்ள ஆடம்பர விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அவரை படுகொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்து

wpengine

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine