தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விட்டு! 30வயது பெண் தற்கொலை

‘எதுவும் நிரந்தரமல்ல’ என முகப்புத்தகத்தில் இடுகையொன்றை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் கழுத்தில் சுருக்கிட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மாலபே கஹன்தொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாலபே , கஹன்தொட பிரதேசத்தில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியையாக பணி புருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை அவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , தற்கொலை செய்துக்கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இவர் பணிபுரிந்த தேசிய பாடசாலையில் இருந்து பதவி விலகியுள்ளார்.

தனது மகளுக்கு கல்வியை கடந்து வேறு உலகம் இல்லை என அவரது தாய் கூறியுள்ளார்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு முந்தைய தினம் மகள் தன்னுடன் படுத்து உறங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் அதுருகிரிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வரவு,செலவு திட்டத்தில் அரச ஊழியர்களை ஏமாற்றிய அரசு

wpengine

“தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை”

wpengine

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine