கிரீன் கார்ட் எனப்படும் அமெரிக்க குடிவரவு விசா லொத்தர் சீட்டு வேலைத்திட்டத்திற்கான பதிவுகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் மேற்கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்கலாம், பல முறை விண்ணப்பித்தால் தகுதியற்றதாகிவிடும்.
விண்ணப்பதாரர்கள் விசா லொத்தருக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பதாரர் விண்ணப்ப உறுதிப்படுத்தல் எண்ணை கவனமாக வைத்திருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நாடுகளில் பிறந்தவர்களுக்கு இந்த லொத்தர் சீட்டிழுப்பு போட்டியில் பங்கு பெற முடியும். இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கிரீன் கார்ட் சீட்டிழுப்பின் கீழ் தேர்ந்தெடுக்கடும் விண்ணப்பதாரிகளுக்கு அமெரிக்க குடிவரவு விசாவுக்கான நேர்காணல் நடத்தப்படும். அதில் தகுதி பெற்றால் அமெரிக்காவில் சட்டரீதியான நிரந்த குடியுரிமை வழங்கப்படும்.
இணையத்தளம் ஊடாக அதற்காக பதிவு செய்ய முடியும் எனவும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாதெனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்திற்கு நுழைவதன் ஊடாக இதற்கு பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.