(ஊடக இணைப்பாளர் தமிழ் மக்கள் பேரவை)
இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை
தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு:
தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால்
தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை
நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை
தீர்க்கமாக வெளிப்படுத்தும ; ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர்
அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது.
நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று
ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு
வெளியிட்டது.
தமிழர் தாயகம், இலங்கைத் தீவு மற்றும் அனைத்துலக நாடுகளில் வாழும் பல்வேறு தமிழ் ;
தரப்புக்களிடமிருந்து எழுத்து வடிவிலும், வாய்மொழி மூலமாகவும் பெறப்பட்ட பெருமளவான
அறிவுரைகளை உள்வாங்கி, குறித்த தீர்வுத் திட்டம் இறுதி வடிவம் செய்யப்பட்டது. 2016 ஏப்ரல் ;
10 ஆம் திகதி அந்த இறுதி வரைபு எம்மால் வெளியிடப்பட்டது.
இவ்வாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இந்த திர்வு திட்டம்
வரைபானது, இலங்கை அரசமைப்பு சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினரிடம் எம்மால் வழங்கப்பட்டது.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின்
அரசமைப்புக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடமும் எம்மால் நேரடியாக
கையளிக்கப்பட்டது. மேலும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய
ஒன்றியம், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச
சமூகத்திடமும் அந்தத் தீர்வுத்திட்டம் நேரடியாகச் சேர்ப்பிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவை ஒட்டுமொத்த தமிழத் தேசிய இனத்தின் பிரதிநிதியாகவே இந்த அசியல்
தீர்வுத் திட்டத்தை வெளியிட்டது என்பதனை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட “எழுக தமிழ்!”
பேரணிகள் நிரூபித்தன. இந்தத் தீர்வுத் திட்டத்தை தமிழ் ; மக்கள், பல்லாயிரக் கணக்கில் திரண்டு
அங்கீகரித்திருந்தனர்.
அந்த வகையில் தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வு இன்னதுதான் என்பது
மீளவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் – தமிழ்த் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் ; மக்கள்
பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் திர்வுத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழ்த்
தேசத்தின் அடிப்படை அரசியற் பிறப்புரிமைகளான பிரிபடாத தமிழர் தாயகம், சுயநிர்ணய
உரிமை, தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரம் என்பவற்றை சிறீலங்காவுக்கான அரசமைப்பு
உருவாக்க சபையின் வழிகாட்டல் குழுவால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முற்றாக
நிராகரித்துள்ளது.
அரசமைப்பு உருவாக்க சபையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் கூட, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிறப்புரிமைகளை வழிப்படுத்தல் குழுக ;
கூட்டங்களில் வலியுறுத்தவில்லை என்பது மட்டுமன்றி, இந்த அடிப்படைப் பிறப்புரிமைகளை
மறுதலிக்கும் நிலைப்பாட்டுக்கு ஒப்புதலும் அளித்துள்ளனர்.
வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கியுள்ள பின்னிணைப்பில், தமிழ்
மக்களின் அடிப்படைப்பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இந்த இடைக்கால அறிக்கையை
பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால்தாமும் அதனை ஏற்றுக்கொள்ளத்
தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்துமூலம் வாக்குறுதி அளித்துள்ளமை
மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது.