பிரதான செய்திகள்

மூதூர் பகுதியில் முஸ்லிம்,தமிழர் மீது அதிகாரிகள் தாக்குதல்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் வயல் காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மூன்று பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளிவெட்டி-பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார், மூதூர்- லேக் வீதியைச்சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.ஜிஹாத் மற்றும் மூதூர்- ஆணைச்சேனையைச் சேர்ந்த எம்.ஜ.றிசாத் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கங்குவேலி பகுதியில் உள்ள தங்களுடைய விவசாயக் காணிகளை செய்கை செய்ய மூதூர் பிரதேசத்திலிருந்து சனிக்கிழமை காலை சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவின்படியே தாங்கள் அங்கு சென்றதாகவும் காயமடைந்த தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

தங்களை, சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களே தாக்கினர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்; நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள்!

Editor

தற்போது அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அதிகாரிகள் பணியாற்றுவதில்லை

wpengine

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை! வீதியில் இறங்கத் தயார்.

wpengine