பிரதான செய்திகள்

ஞானசாரை மியன்மாருக்கு அழைத்த அசின் விராது

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மியன்மார் நாட்டுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டின் 969 இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராது தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

சிறுபான்மை ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான மியன்மார் அரசாங்கத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகள் காரணமாக அந்நாடு சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அவ்வாறான நிலையில் சர்வதேச பௌத்தர்களின் ஆதரவை மியன்மாருக்கு ஆதரவாகத் திரட்டியெடுக்கும் நடவடிக்கையொன்றை சர்ச்சைக்குரிய விராது தேரர் ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒருகட்டமாகவே ஞானசார தேரருக்கும் மியன்மார் வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்திய விமானப் படை பிரதானி இலங்கைக்கு விஜயம்!

Editor

பேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள்

wpengine

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

wpengine