பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த அமைச்சர் வஜிர

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்திற்கு நேற்று  மாலை 4.30 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சருக்கும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள், தடைப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா விபுலானந்தா பாடசாலை வளாகத்தில் தற்கொலை அங்கி

wpengine

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

wpengine

லண்டன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை! (விடியோ)

wpengine