வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற வந்த யுவதிக்கு குறுந்தகவல் அனுப்பிய உத்தியோகத்தருடன் குறித்த யுவதியின் தந்தை தர்க்கம் புரிந்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த பரீட்சைக்குத் தோன்றிய இளம் யுவதி ஒருவருடைய தொலைபேசி இலக்கத்தை எடுத்து “நீங்கள் பரீட்சையில் சித்திபெறவில்லை” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து இன்று காலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குச் சென்ற குறித்த யுவதி மற்றும் தந்தை அலுவலக உத்தியோகத்தரை வெளியே அழைத்து “பரீட்சை எழுதிய விண்ணப்பத்திலுள்ள தொலைபேசி இலக்கத்தினை எடுத்து எவ்வாறு குறுந்தகவல் அனுப்ப முடியும்?” என்று கேள்வி கேட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளரிடம் திங்கட்கிழமை வந்து முறையிடுவதாகத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.