Breaking
Sat. Nov 23rd, 2024

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத அமைப்பினூடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மன்னார், மாந்தை , திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், கடந்த திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதோடு, இது தொடர்பில் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

மேலும், எமது நியாயப்பூர்வமான வேண்டுகோளைப் புறக்கணித்து எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த திறப்பு விழா நடை பெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலே, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரனைப்பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரனைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக நேற்றைய தினம் தனக்கு கிடைத்துள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *