Breaking
Sat. Nov 23rd, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

நேற்று புதன் கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் மிகக் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என கருதலாம்.

மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அஞ்சியே கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை ஹரீஸ் பகிரங்கமாக போட்டு உடைத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெற்றி கொள்ள முஸ்லிம்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனர். அன்றும் இன்றும் முஸ்லிம்களே இவ்வாட்சியாளர்களின் பலிக்கடாவாகும்.

இடைக்கால அறிக்கையின் வழிப்படுத்தல் குழுவுக்கு மு.கா உரிய நேரத்தில் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை அல்லது சமர்பிக்கவே இல்லை என்பது உறுதியானது. இருந்த போதிலும் அமைச்சர் ஹக்கீம் தான் சமர்பித்துள்ளதாக ஹரீசிடம் கூறியுள்ளார். மக்களைத் தான் ஏமாற்றுகிறார் என்றால் பிரதி தலைவரையுமா பொய் சொல்லி ஏமாற்றுகிறார்?

அமைச்சர் றிஷாத் போன்றவர்களும் எங்கள் கொள்கைகளுடன் ஒத்த கொள்கையில் இருக்கும் போது எங்களுக்கென்ன என கரையோர மாவட்ட விடயத்தில் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாதின் உணர்வை பாராட்டினார். அவரின் இது தொடர்பான பேச்சு நாங்கள் செய்யாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதில் விழிப்பாக உள்ளது என்பதாகும். பிரதி அமைச்சர் ஹரீசின் இந்த மன நிலை போற்றத்தக்கது. யார் குற்றினாலும் அரிசானால் சரியல்லவா?

கரையோர விடயத்தில் ஹரீஸ் வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளார். யாராவது எதிர்த்தால் குத்தி குடலை எடுத்து மாலை போடுமளவு வெறியில் உள்ளார். பிரதி அமைச்சர் ஹரீசின் இச் சமூக உணர்வை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் சமூக உணர்வாளன் தான். அவரின் பாராளுமன்ற பேச்சுக்களை பார்த்தாலே போதும்.

மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானது என்பதை இருவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அப்படியானால் வாக்களித்தது துரோகமென தெளிவான அறிந்து கொண்டாகும். நேரடியாக முஸ்லிம்களை கடுமையாக பாதிக்கும் என அறிந்தும் இந்த செயல்களை செய்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு மக்கள் வழங்கப்போகும் தண்டனை என்ன?

எதிர்காலத்தில் இது தொடர்பான பாதகங்களை குறைக்க ஒரு நடுநிலை குழு அமைக்கப்படல் வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இது நாம் செய்த தவறே. மாகாண திருத்தச் சட்டத்துக்கு முன்பு ஒரு நடுநிலை குழுவால் எமது அரசியல் வாதிகள் இயக்கப்பட்டிருந்தால் இந் நிலை வந்திருக்குமா? பிழை அனைத்தும் எமது அரசியல் வாதிகளை மாத்திரம் சார்ந்து விடாது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எதுவித பயனுமற்ற வெற்று அமைப்பு.

வழக்கறிஞரான ஹரீஸ் கலப்பு தேர்தல் முறை என்பது, ஐம்பது வெல்லும் கட்சிக்கும் ஏனைய ஐம்பதும் தோற்கும் கட்சிக்கும் என கூறியிருந்தார் (ஐம்பதுக்கும் ஐம்பது விகிதத்தை அடிப்படையாக கொண்டு). இதற்கான சான்றுகளை வெளிப்படுத்துவாரா? நிச்சயம் அவரால் வெளிப்படுத்த முடியாது. அவருக்கு கலப்பு தேர்தல் தெரியாமல் இருந்திருக்காது. வழக்கறிஞரல்லவா? சற்று குழம்பிவிட்டார். நிதானத்தின் போதே சரியானவற்றை சரியான விதத்தில் கதைக்கலாம். இதன் மூலம் பிரதி அமைச்சர் ஹரீசின் வழக்கறிஞர் என்ற பட்டம் கேள்விக்குட்படுத்தப்படப் போகிறது? நானும் வழக்கறிஞரல்ல.

இறுதியில் அமைச்சர் ஹக்கீமை நோக்கி இரு விவாத அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. அதில் ஒன்று அமைச்சர் றிஷாதினுடையது. மற்றையது குறித்த அதிர்வு நிகழ்வின் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்டது. பல அழைப்புக்கள் விடுத்தும் அவர் வருகிறாரில்லை என்ற குற்றச்சாட்டை ஊடகவியாளர் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மாட்டி விடுவோம் என்ற அச்சமோ? மடியில் கணமில்லை என்றால் பயமெதற்கு? இன்றைய அதிர்வை பார்த்த பிறகுமா அமைச்சர் ஹக்கீம் அதிர்வை அதிர்வடையச் செய்ய வருவார் என நம்புகிறீர்கள்?

அமைச்சர் றிஷாத் பற்றிய ஓரிரு விடயங்களை அமைச்சர் ஹக்கீம்,பிரதி அமைச்சர் ஹரீசிடம் கூறியுள்ளார் (சொல்லாமல் ஆட்சியை விட்டும் மாறிய விடயம் என்றெல்லாம் பல) . அது அப்பட்டமான பொய்யென மறுத்தார் அமைச்சர் றிஷாத். வழிப்படுத்தல் குழுவுக்கு யோசனை சமர்ப்பித்தேன் என கூறியவர் இதனை கூற மாட்டாரா என?

அத்தோடு பிரதி அமைச்சர் ஹரீசுக்கு தெரிய வாய்ப்பில்லாததும் அமைச்சர் ஹக்கீமுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் மாத்திரம் தெரிந்த விடயங்கள் பற்றிய பல விடயங்களில், அமைச்சர் ஹக்கீம் மீது அமைச்சர் றிஷாத் குற்றச் சாட்டுக்களை அடுக்கினார். குற்றம் புரிந்தது யார் என நிரூபிக்க அமைச்சர் ஹக்கீம் விவாத அழைப்பை ஏற்பாரா? அமைச்சர் றிஷாத், அமைச்சர் ஹக்கீம் இல்லாத நேரம் பொய் கூற வாய்ப்புள்ளதல்லவா? அல்லது வடிவேலாக மாறி யாரும் எதிர்த்து சாதூரியமான கேள்வி கேட்க முடியாத கூட்டங்களில் சிரிப்பொலிக்காகவும் மக்களை ஏமாற்றவும் தான் கதைப்பாரா?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *