பிரதான செய்திகள்

ரோஹிங்கியர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு சட்ட நடவடிக்கை முடியும்

கல்கிஸ்சை பிரதேச குடியிருப்பு ஒன்றில் தங்கிருந்த மியன்மார் பிரஜைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டவிரோத வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

தேரர்களும், பொதுமக்களும் நேற்று செயற்பட்ட விதம் அவ்வளவு உகந்தாக இல்லை.எனவே, அவ்வாறு செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான முறைமையொன்றை அவர்களுக்க விளங்கக்கூடிய வகையில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால், மக்கள் இதுபோன்ற முறையில் செயற்பட மாட்டார்கள் என்பது தமது நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையுடன் செய்துகொண்ட அசல் உடன்படிக்கையில் மாற்றம் இல்லை அதானி குழுமம் .

Maash

அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படலாம்

wpengine

13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்

wpengine