Breaking
Sun. Nov 24th, 2024

(அனா)
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை மாலை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மேற்டசொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கை சம்பந்தமாக அநேகமான முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி மீன் சந்தையில் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு காணப்படுகின்றது.

கையூட்டல்கள் மூலம் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மக்களால் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பெருந்தொகைப் பணத்தை கொண்டு பிரதேச சபை கடனாக பெற்று இப்பிரதேசத்திற்கு பொருத்தமில்லாத மண் அகழ்வு இயந்திரம் ஒன்றை முறைகேடான முறையில் பிரதேச சபை செயலாளரின் தன்னிச்சையின் பெயரில் செயற்பட்டு இருப்பதென்பதை சபை வன்மையாக கண்டிக்கின்றது.

அதுமாத்திரமில்லாமல் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில் பொருத்தமான விசாரணையை மேற்கொள்ள ஓட்டமாவடி பிரதேச செயலாளர், உதவித் திட்டப் பணிப்பாளர், கணக்காளர், கோறளைப்பற்று மத்தி பிரதே செயலாளர் அடங்களாக ஒரு விசாரணை குழுவை இப்போது நியமிக்கின்றோம்.

இந்த விசாரணை குழு இரண்டு வாரத்திற்குள் பரிபூரணமாக விசாரணைகளை மேற்கொண்டு அதனுடைய அடைவுகளை இணைத் தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதோடு, இதில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் விடயம் சம்பந்தமாக மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண ஆளுநனர், புலனாய்வு பிரிவு, பாராளுமன்ற கோப்புக்கும் பாரப்படுத்தும் படி இணைத் தலைமைகள் கேட்டுக் கொள்கின்றது.

அத்தோடு விசாரணைக்கு நியமிக்கப்பட்ட குழுக்கள் பிரதேச சபையின் ஆவணங்களை பார்வையிடுவதற்கு அதிகாரம் வழங்குமாறு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்க வேண்டும்.

ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தராதவிடத்து வேறு பிரதிநிதியை அனுப்புமாறு கோரியும் யாரும் வராதது கண்டிக்கப்பட வேண்டிய வியடம் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *