பிரதான செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வு! பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலிப்பகுதியில் சட்டத்திற்கு முரணான மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் முறையிட்டுள்ள போதிலும் இதுவரையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2017.09.20 அன்று திம்பிலிவாழ் மக்கள் குறித்த முறைப்பாட்டை என்னிடம் முன்வைத்தனர்.

மறுநாளே குறித்த இடங்களுக்குச்சென்று சட்டத்திற்கு முரணாக மணல் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்தினேன்.
இது தொடர்பாக உரிய இடங்களுக்கு கொண்டு சென்று சட்டத்திற்கு முரணான மணல் அகழ்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

wpengine

வித்தியாவுக்கு முழுமையாக தீர்வு கிடைக்க வேண்டும்! விஜயகலா எதிராக

wpengine

தமிழில் தேசிய கீதம்;அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தில் மனு

wpengine