பிரதான செய்திகள்

அதிகாலை வவுனியா புகையிரத நிலையம் முற்றுகை

வவுனியா புகையிரத நிலையத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கு கே.கே.எஸ் நோக்கி புறப்பட்ட புகையிரதம் பொல்காவலை பகுதியில் தடம்புரண்டதால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் பொல்காவலை பகுதியிலிருந்து பயணிகளை இ.போ.ச பேருந்து மூலம் வேறொரு புகையிரத நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட புகையிரம் மாலை 5.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது.

வவுனியா புகையிரத நிர்வாகி இதற்கு மேல் புகையிரதம் கே.கே.எஸ் நோக்கி பயணிக்காது என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் புகையிரத நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் புகையிரத நிர்வாகியிடம் சுமார் 10 நிமிடத்திற்கு மேல் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் புகையிரத நிலையத்திற்கு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது.
அந்த புகையிரத்தில் பயணிகளை ஏற்றிசென்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் வவுனியா புகையிரத நிலையத்தில் அசாதாரண நிலை காணப்பட்டது.

Related posts

சினோபெக்கின் முதலாவது எரிபொருள் தொகை அடுத்த மாதம் நாட்டிற்கு!

Editor

“மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரபீக் அவர்களின் மறைவு! ரிஷாட் அனுதாபம்!

wpengine

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine