(முசலி ஊரான்)
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள மன்/முசலி தேசிய பாடசாலையின் ஆசிரியர் விடுதி கட்டிடத்திற்கான கொடுப்பனவில் சுமார் 1350000/-ரூபா நிதி மோசடி ஒன்றினை பாடசாலை ஆசிரியர் (உப செயலாளர்) மேற்கொண்டுள்ளார். என யூ.என்.நிறுவனத்தின் மன்னார் மாவட்ட திட்ட முகாமையாளர் குற்றம் சுமத்தி உள்ள வேலை இது தொடர்பில் மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என அறியமுடிகின்றது.
இது தொடர்பான குற்றச்சாட்டில்
ஆசிரியர் விடுதி கட்டத்திற்கான கட்டுமான வேலைகளை வேறு ஒப்பந்தகார் ஒருவருக்கு வழங்கி இருக்கின்ற போது பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றும் ஒருவரின் பெயரில் இரண்டு முறைகள் காசோலை எழுதப்பட்டு சுமார் 1350000/-ரூபா பணம் மாற்றப்பட்டுள்ளது.எனவும் இதில் வலையக் கல்வி பணிப்பாளரின் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்றும்,இந்த நிதி மோசடியினை மேற்கொண்டவர் வலயக் கல்வி பணிப்பாளரின் மிகவும் நெருக்கமான ஆசிரியர் எனவும் முசலி பிரதேச ஆசிரியர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இது போன்று வலயக் கல்வி பணிப்பாளரின் மிகவும் நெருக்கமான முசலி,நானாட்டன் பிரதேசங்களில் அதிபர்களாக கடமையாற்றும் பலர் பாடசாலை நேரத்திலும் ஒப்பந்தகார வேலைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள் எனவும்,இவர்களுக்கு எதிராக வலயக்கல்வி பணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றசாட்டும் முன்வைக்கப்படுகின்றது.