பிரதான செய்திகள்

வவுனியாவில் பரீட்டை எழுதும் மாணவிக்கு இலக்கம் கொடுத்த ஆசிரியர்

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியொருவருக்கு ( தனியார் விண்ணப்பதாரி) கடமையிலிருந்த மேற்பார்வையாளர் பிறிதொரு ஆசிரியரிடம் அவரது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி குறித்த மாணவியிடம் வழங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த மேற்பார்வையாரின் வேண்டுகோளிற்கிணங்க ஆசிரியர் மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய சமயத்தில் குறித்த மாணவி பரீட்சை முடிவடைந்ததுடன் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறித்த ஆசிரியரை இடமாற்றியுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஆசிரியர் மீது இவ்வாறான பல முறைப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

றிஷாட் வில்பத்து காடழிப்பு!இன்று நீதி மன்ற வழக்கு

wpengine

மன்னார்-பட்டித்தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு சரியாக இடம்பெறவில்லை நவீன்

wpengine