பிரதான செய்திகள்

வில்பத்து விவகாரம்! அமைச்சர் றிஷாட்டிடம் வாக்குமூலம்

மன்னார் , முசலி பிரதேச செயலகப் பிரிவில் காடுகளை அழித்து மக்களை மீள்குடியேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.

முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.டி.ஏ.பொரலெஸ்ஸவின் தலைமையிலான நால்வர் அடங்கிய இந்தக் குழுவினர், முசலி பிரதேச செயலக அலுவலகத்தில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

முசலி பகுதி மக்களை மீள்குடியேற்ற வில்பத்து வனப்பகுதிக்கு உட்பட்ட காணிகள் பயன்படுத்தப்படுவதாக, ரிஷாட் பதியூதினுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வில்பத்து விடயத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

Related posts

தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்கள் அடையாளம்.

Maash

அமைச்சர் ஹக்கீம்,றிஷாட் பற்றி முகநூல் கற்பனை

wpengine

மே மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்- ஜனாதிபதி

wpengine