Breaking
Mon. Nov 25th, 2024
 ஆட்சி அதிகாரத்தை இழந்து, தலைமைக்கு அழகு சேர்க்கும் தனித்துவத்தையும் தொலைத்துள்ள தேசிய காங்கிரஸ், இன்று வானத்தை நோக்கி பட்டமிட ஆசைப்படுகிறது. சிறு பிள்ளையின் பட்டம் நிலையில்லாமல் கூத்தாடுமே தவிர நின்று நிலைக்காது. தேசிய காங்கிரஸ், என்று தன்னைத்தானே சுய மகுடம் சூட்டிக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் மேடைகளில் பேசும் அழகும் கவர்ச்சியும் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் செந்தில், கவுண்டமணி, வடிவேலின் கோமாளித்தனங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றது. செந்திலும் வடிவேலும் கவுண்டமணியும் திரைப்பட வாய்ப்புக்களின்றி ஓய்வெடுக்கும் இந்நேரத்தில் நல்ல நகைச்சுவை நடிகராக தேசிய காங்கிரஸ் தலைவர் களமிறங்குகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க இவரின் வீறாப்பும் விரக்தியும் அதிகரித்து கோமாளிப்பட்டத்தை சுமக்க வைத்துள்ளது. தேசிய கொள்கைக்காரர்களை கைவிட்டு சுதேச கொள்ளைக்காரப் பையனுடன் கைகோரத்த காட்சியை சம்மாந்துறைக் கூட்டத்தில் கண்ணுற்றோர் கதிகலங்கி நின்றனர்.

நவீன தொழில்நுட்பம் இன்று உலகையே உள்ளங்கையிலாக்கியுள்ளது. இதுவும் தெரியாத தேசிய காங்கிரஸ் தலைமை கடைச்சந்தி, வயல், வரப்பு, தெருச்சண்டை, பிச்சைக் காரியின் பிள்ளைச் சண்டை போல மேடைகளில் கொக்கரிக்கிறார். ஊராரும் உலகத்தாரும் இதைப்பார்த்து அவரது ஊரையே இகழ்கின்றனர். பிறந்த மண்ணுக்கு முன்னாள் அமைச்சர் பெருமை சேர்க்கும் அழகே தனிரகம். தேசிய தலைவனாகச் செயற்பட்டிருந்தால் 17,000 வாக்குகளுடன் மண் கவ்வியது ஏன்? என்றும் சிலர் சிலேடையாக பேசுகின்றனர். ஊருக்குள் பிரதேசவாதம், வெளியூரில் தேசிய வாதம் இதுதான். தேசிய காங்கிரசின் இன்றைய நவீன அரசியல் சித்தாந்தம்.

அமைச்சரின் மண்ணிலிருந்து 3 வேன்களில் அண்மையில் மெதமுலானைக்கு மஹிந்தவை சந்திக்க சென்றோரும் தேசிய காங்கிரசின் தேசப் போராளிகள்தானாம்.

நல்லா இருக்குதடி நாடகம்
 
நாள் பட்டுப் போகையிலே
 
நானும் ஒரு கூத்தாடி
 
கேட்போரும் ஒரு கோமாளி’
 
மண்ணைக் காக்க வந்த மைந்தன்
 
மண் கவ்விப் போனது ஏனடியோ
 
ராத்தா இனி மண் கவ்வப் போவது
 
யாரடியோ? ராத்தா கூறடியோ
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *