(செய்தியாளர்)
மன்னாரில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மக்கள் வருடந்தோறும் ஹஜ் பெருவிழாவை தங்கள் தாயக கிராமமான எருக்கலம்பிட்டியில் ஒன்றுகூடி மகிழ்வதை முன்னிட்டு கடந்த 03.09.2017 தொடக்கம் 05.09.2017 வரை பத்தாவது ஹஜ் விழாவாக மூன்று தினங்கள் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தியபோது முப்பது உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றியதுடன் இறுதி நாள் அன்று புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் எருக்கலம்பிட்டி ஈ.வை.எம்.ஏ விளையாட்டு கழகத்துக்கும் அதே இடத்தைச் சார்ந்த ஈ.பி.யுத் கழகத்தக்கும் இடையே நடைபெற்ற இறுதி உதைபந்தாட்டப் போட்டியில் ஈ.வை.எம்.ஏ விளையாட்டு கழகம் 02 க்கு 01 என்ற கோல் வித்தியாசத்தில் ஈ.பி.யுத் கழகத்தை வெற்றியீட்டியது.
இவ் போட்டிகளுக்கு மத்தியஸ்தர்களாக சுபாஸ் (மன்.புனித சவேரியார் தேசிய பாடசாலை ஆசிரியர்), நிசாந்தன், காந்தன் (காவல் துறை) ஆகியோர் கடமைபரிந்தனர்.இவ் போட்டி விழாவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ், மன்னார் நகர் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ், மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், செட்டிக்குளம் மக்கள் வங்கி முகாமையாளர் அப்துல் ஹக் முகமட் ஆரூஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கினர்.