பிரதான செய்திகள்

அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய அதிகாரிகளின் பட்டியலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவும் உள்ளடங்குகின்றார், என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்னால் நிகழ்வு

wpengine

கொத்தனி வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு

wpengine

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.

wpengine