Breaking
Sun. Nov 24th, 2024
????????????????????????????????????
வடக்கு மாகாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள், பொது அமைப்புகள், உள்ளிட்ட அனைவரினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.தியாகி அறக்கொ டை நிலையத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் இருந்து போதைப் பொருட்கள் இங்கே கடத்தி வரப்படுவதற்கு, இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பிரயாண தூரம் குறைவாக இருப்பதே காரணம்.

மேலும் போதை கடத்தலை தடுப்பதற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் இதற்கு பொது மக்களும், பொது அமைப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வடமாகாண சபையின் 48ம் அமர்வில் வட மாகாணத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான குடியிருப்புக்கள் தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

மேற்படி கண்டன தீர்மானம் தொடர்பாக என்னுடன் எவரும் பேசவில்லை. எனக்கு எந்த விடயமும் தெரியாது.

மேலும் இலங்கையில் எந்த பகுதியிலும் எவரும் வாழலாம், காணிகளும் வாங்கலாம் குறிப்பாக வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்றார்கள்.

எனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என ஆளுநர் பதிலளித்தார்.

தொடர்ந்து வடமாகாண சபைக்கும் ஆளுநருக்குமான உறவு தொடர்பாக கேட்டபோது, வடமாகாண சபை தன் பணியை செய்யட்டும் நான் என் பணியை செய்வேன் என பதிலளித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *