பிரதான செய்திகள்

வவுனியா- மன்னார் வீதியில் கட்டாக்காலி மாடுகள்! பாதசாரிகள் விசனம்

வவுனியா, மன்னார் வீதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளால்  போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

இரவு நேர  போக்குவரத்தின்  போது வவுனியா, மன்னார் வீதிகளில் குறிப்பாக பட்டனிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்துக்களை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

விக்னேஸ்வரனின் செயற்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்

wpengine

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வர்த்தக நிலையங்களில் சோதனை!

Editor

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் ஒருவர் கைது!

Editor