Breaking
Thu. Nov 21st, 2024

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளதாக அதன் செயலாளர் என்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மற்றும் மனுக்களில் சிலவற்றின் விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை என்பதால், ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 2 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 401 முறைப்பாடுகள் பாரிய ஊழல்கள் சம்பந்தப்பட்டவை.

அவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 17 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நிறைவடைந்து ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை முடிவடைந்துள்ள 17 முறைப்பாடுகள் சம்பந்தமான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி ஏற்கனவே இரண்டு முறை நீடித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *