பிரதான செய்திகள்

சிலாவத்துறை வைத்தியசாலை சிறுவர் நோயாளர் விடுதியினை திறந்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுவர் நோயாளர் விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியும், யுனிசெப் அமைப்பினூடாக சுமார் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குறித்த சிறுவர் நோயாளர் விடுதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனுடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதி மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதி நிதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்ரதனி, மன்னார் உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில்றோய் பீரிஸ், முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த இம்ரான் இடையில் பேச்சு

wpengine

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

wpengine

வில்பத்துவில் அரசாங்கத்தின் ஓர் இஞ்சிக் காணித்துண்டும் எமக்குத் தேவைப்படாது- நவவி (எம்.பி)

wpengine