Breaking
Sun. Nov 24th, 2024

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குரிய அரச காணியை தனியாருக்கு வழங்க முடியாதென பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதீர்மானத்திற்கு முரணாகவும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் குறித்த காணியை கரைச்சிப் பிரதேச செயலாளர் வழங்க முயற்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குரிய அரச காணியில் ஒருபகுதியை தனியார் ஒருவருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் பொது அமைப்புக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் நடைபெற்ற மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அதன் பின்னர் கடந்த யூலை மாதம் 18ம் திகதி கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த காணி விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போதும்,

குறித்த காணி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட காணியென்றும் இதனை வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் அபகரிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும், இதற்கு உடந்தையாக கரைச்சிப் பிரதேசசெயலர் இருப்பதாகவும் இந்தக் காணி வைத்தியசாலைக்குரிய காணி, ஆகவே தனியாருக்கு சுயநல நோக்கத்திற்கு யாரும் வழங்க முடியாது என்றும் தெரிவித்ததையடுத்து,

இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோர் குறித்த அரச காணியை தனியாருக்கு வழங்க முடியாதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், இணைத் தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் வகையிலும், இந்தக் காணியை தனியாருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் திரைமறைவில் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்தக் காணியானது 1987ம் ஆண்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட அரச காணியை கடந்த 2003ம் ஆண்டு வைத்தியசாலைக்குரிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்போது இந்தக் காணியிலிருந்த மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது தனியார் உரிமை கோருகின்ற காணித் துண்டானது 2003ம் ஆண்டு வெளிநோயாளர் பிரிவிற்கென அமைக்கப்பட்ட கட்டிடம் யுத்தத்தின் போது சேதமடைந்து பின்னர் 2009ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி நெக்கோட் திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 69 ஆயிரத்து 182 அரச நிதியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 28ம் திகதி நடைபெற்;ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணி விடயம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாகவும் அரச நிதியைச் செலவழித்து புனரமைக்கப்பட்ட கட்டிடத்தினையும் காணியையும் எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியுமென்று பிரதேச செயலாளரிடம் எடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதே செயலாளர் கோ.நாகேஸ்வரன் அவர்கள், குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து வந்து தன்னுடைய காணியென்று கூறியிருந்தார்.

அவரிடம் ஆவணங்கள் எவையும் இல்லை என்றும் அந்தப் பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் அங்கு வாழ்ந்தார் என்ற சில தகவல்களின் அடிப்படையில் அவருக்கு அந்தக் காணிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த காணி வைத்தியசாலைக் காணியென்பதால் வைத்தியசாலைக்கே வழங்க வேண்டுமென்றும் அதற்கு மாகாண காணி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இணைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *