பிரதான செய்திகள்

நாளை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தை மன்னாரில் நாளைய தினம் (30) மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினர் இணைந்து நடத்தவிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நாளை காலை 9.00 மணிக்கு மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடையும்.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி விழிப்புணர்வு போராட்டம் மேற்கொள்ளப்படும்.

இந்த போராட்டத்தில் மனித உரிமைகள் ஆர்வலர்கள், பொது அமைப்பினர் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு! அமைச்சு பதவிகளை இராஜனமா செய்ய சொல்லும் விக்னேஸ்வரன்

wpengine

ஆனந்தசாகர தேரர் காவியுடையைக் கலைய வேண்டும்

wpengine

இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளராக பதிவுசெய்ய நடவடிக்கை.

wpengine