பிரதான செய்திகள்

மீண்டும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியான மகிந்த ஆதரவு அணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நோக்கில் மகிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன், மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று அல்லது நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

wpengine

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவிக்கு கொரொனா

wpengine

பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும்-இராஜாங்க அமைச்சர்

wpengine