100 நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரப்பட்ட தொகை அதிகம் எனவும், அவ்வாறு வழங்கினால் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ஏனையோர்களுக்கும் இவ்வாறான தொகையை வழங்கவேண்டி நேரிடும் எனவும் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர். எனினும், இந்த விவகாரத்தை மனிதாபிமானரீதியிலும் விஷேடமாகவும் கருத்திற்கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பல அமைச்சர்கள் விளக்கினர்.
அமைச்சர்களான ராஜித, மங்கள, றவூப் ஹக்கீம் கபீர் காசிம், தயாசிறீஜயசேகர, அனுரபிரியதர்சனயாப்பா, ஹலீம், நான் உட்பட இந்த பத்திரத்தை ஏகமனதாக அங்கீகரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். மிகவிரைவில்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க வழி பிறக்குமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.