மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4ஆம் கட்டை ஆற்று பகுதி,இது போன்று முத்தரிப்புதுறை பகுதியில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்திலும்,அதிகாலையிலும் மண் அகழ்வு இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.
சிலாவத்துறை பொலிஸ் பிரிவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றத்தின் கட்டளைப்படி தடை செய்யப்பட்ட பகுதியில் தொடராக மண் அகழ்வு இடம்பெறுகின்து. எனவும், இப்படியான சட்டவிரோத மண் அகழ்வினால் ஆற்றுபகுதியில் உள்ள மிகவும் பெறுமதியான இயற்கை மரங்கள் அழிகின்றது,கடல் நீர் கிராமங்களை நோக்கி வருகின்றது எனவும் அது போல ஆற்றுபகுதியில் தோட்டம் செய்கின்ற விவசாயிகளின் தோட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்.
இப்படியான சட்டவிரோத மண் அகழ்வுகளை மேற்கொள்கின்றவர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் மண் அகழ்வுகளை மேற்கொள்ளுகின்றார்கள் எனவும் அறியமுடிகின்றது.