வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் உப அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது தமிழ்மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் அபிவிருத்தியையும் மனதில்வைத்து செயற்படவேண்டுமெனவும், அதைவிடுத்து பங்காளி கட்சிகளினுள் பட்டம் பதவிகளுக்காக அது உருவாக்கப்பட்ட நோக்கத்தினை மறந்து செயர்ப்படுவார்கள் எனில் தமிழ் மக்களினை நேரிய வழியில் வழிநடத்தக்கூடிய ஏற்பாடு உருவாகிகொண்டிருபதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயுதப்போராட்டம் என்பது இனி சாத்தியம் இல்லை என்றபோதிலும் அரசியல்ரீதியாக வழிநடத்தக்கூடிய ஒரே ஒரு சக்தி இவர்களுக்குத்தான் இருக்கின்றது, அவர்களை எவ்வாறு அரசியல் ரீதியில் உருவாக்க வேண்டுமென்பது எனக்கு தெரியும் எனவும் அவர்களுக்கு பின்னால் மக்கள் எவ்வாறு வரபோகின்றார்கள் என்கின்ற ஏற்பாடுகள் சரியாக நடக்கின்றது எனவும் தெரிவித்ததோடு, தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதில் சரியாக பயனிக்குமானால் அவர்களுடன் தொடர்ந்து இணைந்து செயர்ப்படுவதர்க்கு தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.