பிரதான செய்திகள்

பொலிஸாரின் ஏற்பாட்டில் மன்னாரில் மூக்கு கண்ணாடி

மன்னார் – பட்டித்தோட்டம் கிராமத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் தேவையுடையவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் இன்று காலை முதல் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கலந்து கொண்டு கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.

இதன் போது தேவையுடைய பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடபகுதி பாடசாலைகளை 12 மணியுடன் மூட வேண்டும் என மாவை கோரிக்கை

wpengine

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 80 ரூபாய் ஆகக் கூடிய நிர்ணய விலை

wpengine

விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

wpengine