Breaking
Wed. Nov 27th, 2024

வெல்­லம்­பிட்டி பகு­தியில் முஸ்லிம் பட்­ட­தாரி பெண் ஒரு­வரின் வீட்­டுக்குள் பொது­ப­ல­சேனா அமைப்­பைச்­சேர்ந்த டான் பிரசாத் புகுந்து அட்­ட­காசம் புரிந்­துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.  இச்­சம்பவம் குறித்து வெல்­லம்­பிட்டி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, தனியார் நிறு­வ­ன­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வி­ருக்கும் புதிய வகை பால்மா தொடர்­பி­லான விளம்­பர விரி­வாக்கல் பணியொன்றை முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் குறித்த முஸ்லிம் நிறு­வ­னத்தில்  பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தொழி­நுட்பப் பிரிவில் பயின்று பட்­டம்­பெற்ற இளம் முஸ்லிம் பெண் பணி­யாற்றும் நிலையில்,  அவர் குறித்த நிறு­வ­னத்தின் விரி­வாக்கல் மற்றும் விளம்­ப­ர­ நோக்கில் சில விபரக் கொத்­து­களை அரு­கி­லுள்ள வீடு­க­ளுக்கு விநி­யோ­கித்­துள்ளார்.  இதனை இன­வாத நோக்­குடன் கண்­ணுற்ற ஒரு­சிலர் பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­ன­ரான டான் பிர­சா­த்திற்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதனையடுத்தே நீதி­மன்ற பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்கும்  டான் பிரசாத்  கடந்த புதன்கிழமை மாலை குறித்த பட்­ட­தாரி பெண்ணின் வீட்­டிற்குள் புகுந்து அட்­ட­காசம் புரிந்­துள்ளார். இத­னை­ய­டுத்து பிர­தே­சத்தில் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் டான் பிர­சா­த்துடன் வந்த இன­வாதக் கும்பல் குறித்த பெண்ணின் வீட்டை முற்­று­கை­யிட்டு இரவு முழு­வதும் அச்­சு­றுத்­த­லாக இருந்­துள்­ளனர். இந்­நி­லையில், வெல்­லம்­பிட்டி பொலிஸில் குறித்த பட்­டதாரி பெண் பணி புரியும் நிறு­வ­னத்­தினால் முறைப்­பாடு செய்­யப்­பட்டது. இத­னை­ய­டுத்து அன்றிரவு அப்­பெண்ணின் வீட்­டுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

இதே­வேளை, மறுநாள் காலை பொலிஸ் விசா­ணை­களும் இடம்­பெற்­றன. பொலிஸ் நிலை­யத்­தில் வைத்தும் டான் பிரசாத் குழு­வி­னரால் பட்­ட­தாரி பெண் உள்­ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளையடுத்து விவகாரம் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *