பிரதான செய்திகள்

நீர்க்கட்டணம் அதிகரிக்க கலந்துறையாடல்! சமுர்த்தி பயனாளிகளுக்கு விலக்களிப்பு

நீர் கட்டணத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நீர் கட்டணத் திருத்தம் தற்போது திட்டமிடப்படுவதாக அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நீர்கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுகின்ற சம்பிரதாயத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

55 வீதமான பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 15 அலகுகள் நீர் மாத்திரமே பயன்படுத்துவதாகவும் சரத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சமுர்த்தி பயனாளிகளுக்கு இந்த நீர் கட்டன திருத்தம் விலக்களிககப்பட்டுள்ளதாகவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிப்பாணை

wpengine

கொத்தனி வாக்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு

wpengine

நாட்டின் இன்றைய நிலைக்கு 20 க்கு கை தூக்கியோரும் பொறுப்புக் கூற வேண்டும் – இம்ரான் எம்.பி

wpengine