Breaking
Mon. Nov 25th, 2024

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

சிலாவத்துறைக் கிராமிய வைத்தியசாலை 1990ல் இரு வைத்தியர்களுடனும் பல பணியாளர்களுடனும் சிறப்பாகச் சேவை செய்துவந்துள்ளது.

மின்வசதியற்ற அக்காலத்தில்
சூரியப்படல் முலம் மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அறிவியாற்றிற்குத் தென்புறமாக அமைந்துள 4ம் கட்டை முதல் முள்ளிக்குளம் வரையான ஏறத்தாள 30 கிராமங்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு சிலாபத்துறை மருத்துவ மனைக்கு உரியது.

இன்றைய நிலையில் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வைத்திய தேவைக்கு முருங்கன் வைத்தியசாலை அல்லது மன்னார் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

முசலிப்பிரதேச மீீீீள்குடியோற்றம் வேகத்தைக் குறைக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக மருத்துவத்துறையும் காணப்படுகிறது. மீள்குடியேறவில்லையா என வினாத்தொடுத்தால் பதிலாக அங்கு மருத்துவ வசதி போதியளவு இல்லை என்கிறார்கள்.

சிலாபத்துறை வடமாகாணச் சுகாதார அமைச்சிற்கு உட்பட்டது. ஆனால் வடமாகாணச் சுகாதார அமைச்சு இதனை ஓரவஞ்சனைப் பார்வையுடன் செயற்படுவதை காணமுடிகிறது. இங்கு பல வருடங்களாக சிங்கள வைத்தியர்கள் கடமை புரிந்தனர். தற்போது வைத்தியர்கள் நியமிப்பதும் இவ்வைத்தியசாலைக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.

இச்செயற்பாடு மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சூழ்சியாகவே கருதப்பட வேண்டும்.
சிலாபத்துறை, நெடுங்கேணி போன்ற பிரதேச வைத்திய சாலைகளை அவற்றின் ஆளணி, பௌதீக வசதிகள் போன்றவற்றை பூர்த்தி செய்த பின்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு சுகாதார அமைச்சர் னுச. P. சத்தியலிங்கம் தெரிவித்தார். தற்போது அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.

இப்படியான ஒரு கள நிலவரத்தில் அமைச்சர் றிசாத்பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ண அவர்கள் சிலாபத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தந்து கட்டிடத்தைத் திறந்து வைத்ததுடன் வைத்தியசாலையின் குறை நிறைகளையும் கேட்டறிந்து இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான திட்ட வரைவை ஒருமாதத்திற்குள் தனக்குத் தருமாறு கூறியதுடன் ஏனைய குறைபாடுகளை உடன் தீர்க்குமாறு உயர் அதிகாரிகளுக்கு கட்டளையுமிட்டார்.

இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்து தருமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் ராஜித ஏற்றுக் கொண்டார். ஆனால், இங்கு ஒரு அதிகாரப் போட்டி நிலைமை காணப்படுகிறது.

இவ்வைத்தியசாலை வடமாகாணசபைக்குட்பட்ட சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது. அதனை மாகாண அரசின் அதிகார வரம்பில் இருந்து விடுவித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்தால்தான் இதனை இலகுவில் செய்யலாம். இதனை விடுவிக்க இலகுவில் வடமாகாணசபை விரும்பாது. இங்கே வடமாகாண ஆளுநரின் அதிகாரத்தைப் பிரயோகித்து விடுவிக்கும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. அதனைப் பயன்படுத்தினால் இலகுவில் வெல்லலாம்.

(உ-ம்) கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை விடுவிக்கப்பட்டு சகல வசதிவசதிகளும் கொண்ட ஆதார வைத்தியசாலையாக தொழிற்படுகின்றது. ஆதார வைத்தியசாலையாக மாற்றப்படும் போது நகர வைத்தியசாலைகளில் பெறும் உயர்சேவை அனைத்தையும் இலகுவில் பெற்றுக் கொள்ளலாம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *