Breaking
Mon. Nov 25th, 2024
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளையழற்சி நோய்க்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூன்று நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார மந்திரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மாநில சுகாதார மந்திரி ஆகியோர் பதவிவிலக வேண்டுமென காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘கோரக்பூர் மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்ததில் தங்களது குழந்தைகளை இழந்த குடும்பக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த மரணங்களின் மூலகாரணங்களை தெரிந்துகொள்ள அரசு விசாரணை நடத்தும் என்று நம்புகிறேன். அவர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியா, அடுத்தடுத்து குழந்தைகள் பலியான விவாகரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *