பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பெண்களுக்கான இலவச சமையல் வகுப்பு வவுனியாவில்

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயம் ஏற்பாடு செய்துள்ள பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சிகள் வவுனியாவில் இடம்பெற்றுள்ளன.

குறித்த செயற்திட்டம் இன்று காலை பொலிஸார் பொதுமக்கள் நல்லுறவைக்கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிராந்திய பொலிஸ் அதிகாரி, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிஸோர், மற்றும் பொதுமக்கள் பெருமளவான பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்விற்கு பிரபல்யமான சமையல் கலை நிபுணர்கள் கலந்து கொண்டு சமையல் பயிற்சியினை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

Related posts

போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது!

Editor

வவுனியாவில் “இடியன்”துப்பாக்கியுடன் இளைஞன் கைது

wpengine

விக்டோரியா மின் நிலையத்தில் திருத்தப் பணிகள் – அமைச்சரவை அங்கீகாரம்

wpengine